சேவல் பயிற்சி அளிக்கும் முறைகள் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சேவல்கள் சண்டையிடும் விதம் ஒவ்வொரு சேவலுக்கும் மாறுபடும். அதேபோல் சேவலுக்கு ஆரோக்கியமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி தரவேண்டும். சேவல் கட்டிவைத்த இரண்டு நாட்களிலேயே சேவலின் மாற்றத்தை காணலாம்.
சேவல்கள் நீண்ட நாட்கள் பயந்த நிலையிலேயே இருக்கும் இதற்கு காரணம் சிறு பருவத்திலேயே அதை நன்கு பயமுறுத்திவைப்பது ஆகும். ஆனால் நன்கு வளர்ந்த சேவல்கள் பயந்து இருந்தால் அதை சரிசெய்வது மிகவும் கடினம். ஏனென்றால் அதனுடைய பிறவிகுணம் பயந்த சுபாவம். அதுபோன்ற சேவல்கள் வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது. ஒரு நல்ல BREAD சேவல்கள் குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் சண்டையிட ஆரம்பிக்கும். பின் அதை கட்டி வைத்து மூன்று மாதம் கழித்து விட்டால் பின் பயம் என்பது அறியாது.
11 மாதங்கள் ஆன சேவல்கள் நன்கு வளர்ந்த சேவல்கள் ஆகும். இந்த வயதானபின்பும் அது தனிமைப்படுத்தப்பட்டும் மீண்டும் அந்த சேவல்கள் பயந்தநிலையிலேயே இருக்குமானால் நீங்கள் வளர்த்தும் சேவல் பரம்பரை மிகவும தகுதியில்லாத வர்க்கம் ஆகும். அதை பூண்டோடு அழித்துவிடுவது நல்லது. மேலம் அலட்டிக்கொள்ளாமல் நிறுத்தி நிதானமாக அதே சமயத்தில் வேகமாகவும் செயல்படும் சேவல்கள் மிகவும நல்ல வர்க்கமாகும். பயம் என்பது குறிப்பிட்ட வயதிற்கு என்னவென்றே தெரியாமல் இருக்கும் இந்த வகை சேவல்கள்.
சில நண்பர்கள் பட்சிகள் பார்ப்பதில் மிகவும் குழம்பிப்போய் உள்ளார்கள். நன்றாக புரிந்துகொள்ளுங்கள் தற்காலத்தில் ஒரோ பட்சி உள்ள அதாவது ஒரு நிற சேவல்கள் காண்பது மிகவும் அரிதாக உள்ளது. அதாவது மயில் என்றால் அதற்கு மட்டும் உண்டான ஜாடகைகள் இருக்கவேண்டும். கோழி என்றால் அதற்கு மட்டும் உண்டான ஜாடைகள் இருக்க வேண்டும இதுபோல் ஆந்தை வள்ளூறு காகம் என எந்த பட்சி எடுத்தாலும் அதற்குண்டான ஜாடைகள் மட்டும் இருக்காது.
காரணம் என்னவென்றால் நாம் அந்த காலத்தில் இருந்தே கோழி வகை சேவல்கள் இருந்தால் மயில் வகை பெட்டைகோழிக்கு இனவிருத்தி செய்கிறோம். அந்த ஜோடிகளுக்கு இறங்கும் குஞ்சுகள் கோழிமயில் வகையாக இருக்கும். இப்படி கலப்படம் செய்து செய்து இன்று ஒரே வகையான சேவல்கள் நமக்கு கிடைக்காமலேயே போய்விட்டது.
ஆகையால்தான் நான் தற்போது ஒருஇன சேவல் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளேன். கோழி என்றால் சேவலும் கோழியாக இருக்கவேண்டும் பெட்டையும் கோழிவகையாக இருக்கவேண்டும்.
நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள் என்னவென்றால் முதலில் ஒரு இன சேவல்களை உருவாக்குங்கள் பின்பு பட்சி பலன்களை பாருங்கள். வெற்றி என்றும் உங்கள் பக்கம்.
Hello bro seval eppadi train pannurathu
ReplyDeleteI accept ur statement bro
ReplyDelete