Kattu Seval Types
Types OF ROOSTERS
Types OF ROOSTERS
1) வள்ளூறு (EAGLE)
பொதுவாக காலும் மூக்கும் சுத்தமான மஞ்சள் நிறத்தில் இருந்தால் வள்ளூறு வகை சேவல்கள் ஆனால் தற்போது முழுமையான வள்ளூறு வகை சேவல்கள் இருப்பதில்லை. கழுத்து இறகுகள் மற்றும் இறக்கையின் இறகுகள் முதுகு இறகுகள் ஆகியவை மஞ்சள் அல்லது பொன்னிறம் ஆகிய நிறங்களில் இருந்தால் அது வள்ளூறு என அழைக்கப்படும். மேலும் இவை கோழி வள்ளூறு மயில் வள்ளூறு மற்றும் காகவள்ளூறு என அமையும்.
2) ஆந்தை (OWL)
பொதுவாக காலும் மூக்கும் சுத்தமான வெள்ளை நிறத்தில் இருந்தால்ஆந்தை வகை சேவல்கள் ஆகும். ஆனால் தற்போது முழுமையான ஆந்தை வகை சேவல்கள் இருப்பதில்லை.ஆந்தை வகை சேவல்கள் கால் வெள்ளை நிறத்திலும் உள்பொங்குகள் பருத்திப்பஞ்சின் நிறத்திலும் இருக்கலாம். 3) கோழி (HEN)
பொதுவாக காலும் மூக்கும் சுத்தமான கருப்பு நிறத்தில் இருந்தால் கோழி வகை சேவல்கள் ஆகும். ஆனால் தற்போது முழுமையான கோழி வகை சேவல்கள் இருப்பதில்லை. கோழி வகை சேவல்கள் கால் கருப்புகாவும் உள் பொங்கு சாம்பள் நிறத்திலும் கண் கருமை நிறத்திலும இருக்கும். அதாவது கருங்கால் கருங்கண் என்று சொல்லக்கூடிய அனைத்து சேவல்களும் கோழிக்கு நிற்கும்.
4) காகம் (CROWS)
பொதுவாக காலும் மூக்கும் சிவந்திருந்தால் காகம் வகை சேவல்கள் ஆகும். ஆனால் தற்போது முழுமையான காகம் வகை சேவல்கள் இருப்பதில்லை. காகம் வகை சேவல்கள் மேல் இறகு செம்மண் நிறத்திலும் சேவலின் முதுகில் உள்ள உள்பொங்கு என்று சொல்லக்கூடிய லேசான் உள் இறகு சாம்பள் நிறத்தில் இருக்கும்.
5) மயில் (PEACOCK)
பொதுவாக மயில் வகை சேவல் என்பது அதன் காலும் மூக்கும் பசுமை இருக்கவேண்டும். (இறகில் எண்ணை கப்பு இருத்தல்). மேலும் சேவலின் கால் நிறத்தையும்(கால் பச்சைக்கால் லேசான இளம் பச்சைகால்). மூக்கில் வன்னி இருத்தல் (மூக்கின் நடுவில் சிறு கரும்பழுப்பு நிறம்) மற்றும் கால் நகங்களின் நிறத்தையும் (அனைத்து நகங்களும் வெள்ளை நிறம்) வைத்து குறிப்பிடுகிறோம்.
kokku vellaiku name ena patchi palan ??????????
ReplyDeleteVelli kaal matturm mooku irunthal Aanthai. Manual kaal,mooku irunthal valluru
DeleteValuru
ReplyDeleteKeeri yanna patchi
ReplyDeleteAndhai
Deleteஉள் பொங்கு என்றால் என்ன?
ReplyDeleteயால சேவல் என்றால் என்ன
ReplyDelete